ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் பணமதிப்பழிப்பு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு விசாரணை இன்று (அக்டோபர் 12) காலை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 2016 நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி திடீரென பழைய 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.
இதனால் ஏழை, எளிய மற்றும் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டனர். பல்வேறு நிறுவனங்களின் தொழில்களும் பாதிக்கப்பட்டது.
எனவே பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ் அப்துல் நசீர், பிஆர் கவாய், ஏஎஸ் போபண்ணா, வி ராமசுப்ரமணியன் மற்றும் பிவி நாகரத்னா அகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை நீதிபதிகள் பணமதிப்பழிப்பு தொடர்பான வழக்குகளின் விசாரணையைத் தொடங்கினர்.
இதில் மத்திய அரசுத் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
“பணமதிப்பழிப்பு காரணமாக தனிநபர் பாதிக்கப்பட்டிருந்தால் நிர்வாக ரீதியில் சரி செய்யலாம்.
அதை விடுத்து அரசியல் சாசன அமர்வு வழக்கை விசாரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம்” என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வாதங்கள் நடைபெற்று வருகின்றன.
“குட்டிக் காவலர்” விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்!
பாம்பன் பாலத்தில் பேருந்து விபத்து: பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!