delhi women commission notice to state police

ராஷ்மிகா டீப்ஃபேக் வீடியோ: காவல்துறைக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

இந்தியா

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு டெல்லி போலீஸுக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Delhi women commission notice to state police

இந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் டீப்ஃபேக் செய்யப்பட்ட ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்ததோடு, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோவை தொடர்ந்து நடிகை கத்ரினா கைஃபின் புகைப்படம், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர், கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுடன் இருப்பது போன்ற புகைப்படங்களும் டீப்ஃபேக் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரவியது.

delhi women commission notice to state police

டீப்ஃபேக் வீடியோவிற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் டீப்ஃபேக் தொழில்நுட்பம் மூலம் புகைப்படங்கள், வீடியோக்களை சித்தரித்து வெளியிட்டால், 3 ஆண்டுகள் சிறை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் போலி வீடியோ குறித்து புகார் அளித்தால் 24 மணி நேரத்தில் அந்த வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் டீப்ஃபேக் வீடியோ விவகாரத்தில் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று டெல்லி போலீஸுக்கு அம்மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அந்த நோட்டீஸில், “நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ பல சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக வெளியான செய்திகள் குறித்து டெல்லி மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

இந்த விவகாரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் வீடியோவில் யாரோ சட்டவிரோதமாகத் தனது புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளதாக கவலையை தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது மிகவும் தீவிரமான விஷயம். இதனை கருத்தில் கொண்டு பின்வரும் தகவல்களை ஆணையத்திற்கு வழங்கவும்:

1. இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர் நகல்,

2. வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் விவரங்கள்,

3. விவகாரத்தில் எடுக்கப்பட்ட விரிவான நடவடிக்கையின் அறிக்கை

விஷயத்தின் தீவிரத்தன்மையக் கருத்தில் கொண்டு நவம்பர் 17 ஆம் தேதிக்குள் கேட்கப்பட்டுள்ள தகவல்களை ஆணையத்திற்கு வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Delhi women commission notice to state police

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

நெருப்போடு விளையாடாதீர்கள் : ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

டிடி பொதிகை பெயர் மாற்றம்: எல்.முருகன் அறிவிப்பு!

விமர்சனம் : ஜப்பான்!

ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு மனு: உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *