ஷ்ரத்தா பாணியில் அடுத்த கொலை: உடலை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த மனைவி!

இந்தியா

டெல்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் அஃப்தாப் அமீன் கொலை செய்து அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வீசிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதே போன்று டெல்லியில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனை மனைவி, மகன் உதவியுடன் கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி வீசி உள்ளார்.

டெல்லியில் உள்ள பாண்டவ நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சன் தாஸ் இவருக்கு பூனம் என்ற மனைவியும் தீபக் என்ற மகனும் இருக்கிறார். அஞ்சன்தாசுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மனைவி பூனம் பலமுறை சொல்லியும் அவர் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.

இதனால் பூனம் கணவரை கொல்ல முடிவு செய்துள்ளார். கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து பின்னர் கொலை செய்துள்ளார். கடந்த ஜூன் மாதம் இந்த கொலை சம்பவம் நடந்ததுள்ளது.

பின்னர், கணவரின் உடலை 22 பாகங்களாக வெட்டி அதை மகன் தீபக் உதவியுடன் ஃப்ரிட்ஜில் வைத்துள்ளார். உடல் துண்டுகளை டெல்லி கிழக்கு பகுதியில் சுற்றுப்புறத்தில் நாள்தோறும் சென்று இருவரும் வீசியுள்ளனர்.

இது குறித்து காவல் துறையினர் வெளியிட்டுள்ள கண்காணிப்பு கேமிரா காட்சியில் தீபக் நள்ளிரவில் ஒரு பையில் வைத்து உடல் பாகங்களை கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. அவருக்கு பின்னால் அவரது தாயார் பூனம் செல்வதும் பதிவாகி உள்ளது.

கடந்த ஜூன் மாதம் பாண்டவ் நகரில் போலீசார் தாசின் உடல் உறுப்புகளை கண்டு பிடித்துள்ளனர். சிதைந்த நிலையில் இருந்ததால் அடையாளம் காண முடியவில்லை. தற்போது ஷ்ரத்தா கொலை தொடர்பாக உடல் பாகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அது ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் இல்லை என்பது தெரியவந்தது. அப்போது தான் அது தாசின் உடல் பாகங்கள் என்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து பூனம், தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து அஞ்சன் தாஸ் மற்றும் அவரது மனைவி பூனம் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ”கடந்த ஐந்தாண்டுகளாக அவர்கள் எங்கள் குடியிருப்பில் வசித்து வந்தனர். 8-9 மாதங்களாக நான் அஞ்சன் தாஸை பார்க்கவில்லை என்றும், சந்தேகத்திற்குரிய எதையும் உணரவில்லை’ என்றும் அவர் கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மொராக்கோ வெற்றியால் ஆத்திரம்: கலவரத்தில் ஈடுபட்ட பெல்ஜியம் ரசிகர்கள்!

மஞ்சிமா மோகனை கரம்பிடித்தார் கௌதம் கார்த்திக்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *