74ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதல்முறையாக இன்று (ஜனவரி 26) தேசிய கொடி ஏற்றினார்.
டெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பாதுகாப்புத் துறை அமைச்சருடன் பிரதமர் மோடி போர் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.
அங்கிருந்து குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெறும், சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதை (முன்பு ராஜபாதை) பகுதிக்கு வந்தார்.
அதுபோன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட எகிப்த் அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி ஆகியோரும் வருகைத் தந்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார்.
பின்னர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தற்போது ஆயுதப்படை, ராணுவப்படை அணிவகுப்பு மரியாதை நடைபெற்று வருகிறது.
பிரியா
ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்: இந்தியாவில் தொடருமா?
5 பேருக்கு அண்ணா பதக்கம், 3 காவல் நிலையங்களுக்கு விருது!