விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!

இந்தியா

விவசாயிகளின் போராட்டத்தை ஒட்டி காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்பு சோதனையால், டெல்லி-காசியாபாத் எல்லையில் இன்று (பிப்ரவரி 14) கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்புகள் டெல்லியில் பிப்ரவரி 13-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

விவசாயிகள் போராட்டத்தை அடுத்து டெல்லியில் நுழைவுவாயில்களான சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. சாலைகளில் தடுப்புகள் மற்றும் முள் வேலிகள் அமைத்து பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினர் தடுத்தனர்.

விவசாயிகள் போராட்டம் காரணமாக, டெல்லியில் உள்ள சிங்கு எல்லையில் விரைவு அதிரடிப் படையினர், காவல் துறையினர் மற்றும் கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.மேலும், விவசாயிகள் டெல்லியில்  நுழைவதை தடுக்க சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தையடுத்து அதிகாரிகளின் தீவிர சோதனையால் டெல்லி-காசியாபாத் எல்லையில் நீண்ட போக்குவரத்து நெரிசல் இன்று ஏற்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலம் செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

ஹரியானா – டெல்லி எல்லையான ஷம்பு பகுதியில் போலீசார் நடத்திய கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தடியடியால் விவசாயிகள் நேற்று காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும், விவசாயிகளுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தொலைபேசியில் பேசி ஆறுதல் தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பெரிய ‘நோ’ சொன்ன மிருணாள் தாகூர்… SK 23 ‘ஹீரோயின்’ இவர்தான்!

விவசாயிகள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற முடியாது: மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *