டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ ரெய்டு!

இந்தியா

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான 21 இடங்களில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மது விலக்கு கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக, சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

delhi deputy chief minister house cbi raid

டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மது விலக்கு கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த மது விலக்கு கொள்கையின் படி மதுக்கடைகளின் லைசன்ஸ் வாங்குவது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

delhi deputy chief minister house cbi raid

இதுகுறித்து மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சிபிஐ அதிகாரிகள் என் வீட்டில் உள்ளார்கள்.

விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பேன். அவர்கள் எனது வீட்டில் எதையும் கண்டுபிடிக்க மாட்டார்கள்” என பதிவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் 7 மாநிலங்களில்,  20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

குஜராத் பாலியல் குற்றவாளிகளை விடுதலை செய்தது யார்? பட்டியலிட்ட ப.சிதம்பரம்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *