தீபாவளி நாளான நேற்று காற்றின் தரம் மிகவும் மோசமானதாக பதிவாகி, உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி உள்ளது.
தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் தீபாவளி கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியது.
இதுபோல் தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. மீறி வெடித்தால் ரூ.200 அபராதமும், ஆறு மாதங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த டெல்லியில் 2023 ஜனவரி 1 வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் காற்றின் தரத்தின் சராசரி தரவுகளின்படி, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் காற்றின் தரக் குறியீடு 312 அதாவது ‘மிகவும் மோசமான’ வகை இருந்ததாக தெரிவித்துள்ளது.
தீபாவளி நாளான நேற்று உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லியும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் லாகூரும் பதிவாகியுள்ளது.
டெல்லியின் நெருங்கிய நகரங்களான காஜியாபாத் (301), நொய்டா (303), கிரேட்டர் நொய்டா (270), குருகிராம் (325) மற்றும் ஃபரிதாபாத் (256) ஆகியவை மோசமான காற்றின் தரம் மற்றும் மிக மோசமான காற்றின் தரத்தைப் பதிவுஞ செய்துள்ளன.
தமிழகத்தின் நிலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
கடந்த ஆண்டு தீபாவளியன்று (2021 நவம்பர் 4) டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 382 இருந்தது குறிப்பிடத்தக்கது.
-ராஜ்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
கிச்சன் கீர்த்தனா – வெல்ல மைசூர்பாகு