டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக இந்திரா காந்தி விமான நிலையம், பயணிகளுக்கு சில அறிவுறுத்தல்களை இன்று (ஜனவரி 7) வழங்கியுள்ளது.
டெல்லியில் கடந்த சில வாரங்களாக கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. 3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குளிர் வாட்டி வதைப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் ரயில் மற்றும் போக்குவரத்து சேவையில் அடிக்கடி மாற்றம் நிகழ்கிறது. கடந்த வாரம் டெல்லி விமான நிலையத்தில் 100 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தநிலையில், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் கடும் பனிமூட்டம் காரணமாக பயணிகளுக்கு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று டெல்லியில் அனைத்து விமான சேவைகளும் இயல்பாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விமானம் குறித்த சமீபத்திய தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை பயணிகள் தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடும் பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக நேற்று டெல்லியில் பல விமானங்கள் தாமதமாக புறப்பட்ட நிலையில், விமான நிலையம் பயணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பெண்கள் பாதுகாப்பில் ’சென்னை’ முதலிடம்!