வங்கக்கடலில் இன்று மாலை ரீமால் புயல் உருவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், புயல் உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் தொடர்ச்சியாக மே 23ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக இது வலுப்பெற்றது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாக வலுபெரும். வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டி உள்ள மேற்கு வங்கக் கடற்கரையில் இந்த புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (மே 25) காலை புயல் உருவாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மாலைக்கு பிறகே புயல் உருவாகும்.
ரீமால் புயல் நாளை இரவு வங்கதேசம் ஒட்டியுள்ள சாகர் தீவு அருகே மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமரன் டீமுக்கு சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்து!
காரணமின்றி கைது… : காஷ்மீரில் மெகபூபா முப்தி தர்ணா!