உலக அளவில் டீப் ஃபேக் வீடியோக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பமானது உலக அளவில் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில், ஏஐ தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி பெண்களின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து இணையத்தில் சிலர் வெளியிட்டு வருகின்றனர்.
இந்திய திரையுல நடிகைகள், ராஷ்மிகா மந்தனா, ஆலியா பட், கத்ரினா கைப், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோரின் டீப் ஃபேக் ஆபாச வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களை மார்ஃபிங் செய்து ஆபாசமாக சித்தரித்து வெளியிடும் போக்கானது உலக அளவில் அதிகரித்துள்ளதாக சமீபத்திய அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
கிராஃபிகா நிறுவனம் நடத்திய ஆய்வில், “அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்களை பெறுவதற்காக, ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுகின்றனர்” என்பது தெரியவந்துள்ளது.
மேலும், “கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 2.4 கோடி பேர் டீப் ஃபேக் செயலிகள் மற்றும் வலைதளங்களை பார்வையிட்டுள்ளனர். இந்த செயலிகள், வலைதளங்களில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரிக்க முடியும்.
இதில் பெரும்பாலான செயலிகளில் பெண்களின் புகைப்படங்களை மட்டுமே ஆபாசமாக சித்தரிக்க முடியும் என்ற ஆப்ஷன் உள்ளது.
சமூக ஊடகங்களில் இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து டீப் ஃபேக் வீடியோக்களின் பயன்பாடு 2,400 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 53 டெலிகிராம் குழுக்களில் இந்த சேவையை 10 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னைக்கு ரூ.4000 கோடி: எடப்பாடிக்கு மா.சுப்பிரமணியன் சவால்!