இந்தியாவில் தூக்கு தண்டனைக்கு மாற்று வழி கண்டறிய நிபுணர் குழு அமைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பல நாடுகளில் தூக்கு தண்டனை கைவிடப்பட்ட நிலையில் இந்தியாவிலும் தூக்கு தண்டனையை கைவிட்டு மாற்று தண்டனை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ரஷி மல்கோத்ரா பொதுநல மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை மார்ச் மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,
தூக்கு தண்டனை நிறைவேற்றுவதால் கைதிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள், மன அழுத்தம், தூக்கு தண்டனைக்கு மாற்று தண்டனை வழங்க முடியுமா உள்ளிட்டவை குறித்து மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டார்.
இந்தநிலையில் மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் வெங்கட் ரமணி பதில் வழங்கியுள்ளார்.
அதில், தூக்கு தண்டனைக்கு மாற்றாக வேறு ஏதேனும் தண்டனை வழங்க முடியுமா என்று ஆய்வு செய்வதற்காக நிபுணர் குழு அமைப்பதற்கான ஆலோசனையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை மீண்டும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
செல்வம்
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!
மக்களுக்கு எதன் மீது நம்பிக்கை இருக்கு? வேண்டியவனுக்கு ஒரு வேண்டாதவனுக்கு ஒரு நீதியாக இருக்கும் போது எதற்கு குழு அதற்கு கோடி செலவு பண்ணனுமா?