உத்தரபிரதேசத்தில் பாசமாக வளர்த்த பூனை இறந்து போனதால், பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரேச மாநிலம் அம்ரோகா பகுதியை சேர்ந்தவர் பூஜா. தற்போது, 32 வயதாகும் இவர் டெல்லியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்தார். பின்னர், கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தார். தொடர்ந்து, தனது தாய் கஜ்ராதேவியுடன் வீட்டில் வசித்து வந்தார். தனிமையில் இருந்த பூஜா பாசமாக ஒரு பூனையை வளர்த்து வந்தார். death of pet cat; lady suicide
குழந்தை போல அந்த பூனையை அவர் பார்த்து கொண்டார். இந்த நிலையில், அந்த பூனை திடீரென்று இறந்து போனது. இதனால், பூஜா மிகுந்த வேதனையடைந்தார். அழுதபடியே இருந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர்.
மேலும், பூனையின் உடலை அடக்கம் செய்யவும் பூஜாவிடத்தில் கூறி வந்துள்ளனர். ஆனால், பூஜா பூனையின் உடலை அடக்கம் செய்யாமல் இரு நாட்களாக தன் தோளிலேயே போட்டு வைத்து கொண்டு இருந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அடக்கம் செய்ய கூறினால், ‘என் பூனை உயிருடன் வரும் ‘என்று கூறி கோபமடைந்துள்ளார். death of pet cat; lady suicide
ஆனால், இரு நாட்கள் கழித்தும் பூனைக்கு உயிர் திரும்பவில்லை. இதனால், வேதனையடைந்த பூஜா, வீட்டில் தனது அறையில் சென்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பூஜாவை தேடி கஜ்ரா தேவி அறைக்கு சென்ற போது, அவர் தூக்கு மாட்டி இறந்து கிடப்பதை கண்டு அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார், பூஜாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். death of pet cat; lady suicide
பாசமாக வளர்த்த பூனை இறந்ததால், பெண் உயிரை மாய்த்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.