ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அவர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், ஹெலிகாப்டர் பணியாளர்களின் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி நேற்று (மே 19) அசர்பைஜன் சென்று அணைத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் அங்கிருந்து ஈரான் திரும்பும்போது அவர் சென்ற ஹெலிகாப்டர் தப்ரீஸ் அருகே விபத்தில் சிக்கியது.
அந்த ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், ஆளில்லா விமானம் மூலம் ஹெலிகாப்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து ஜல்பா மலைப்பகுதியிலிருந்து ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் பணியாளர்களின் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி, அந்த ஹெலிகாப்டரின் டெக்னீஷியன் பெஹ்ரூஸ் காடிமி, பைலட் செயத் தாஹெர் முஸ்தபாவி மற்றும் இணை விமானி மொஹ்சென் தர்யானுஷ் என்பது தெரியவந்துள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…