மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில், அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரி சதவீதத்தின் அடிப்படையில் அகவிலைப்படி நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ஜனவரி, ஜூலை என முன்தேதியிட்டு வழங்கப்படுவது வழக்கம்.
அந்தவகையில் இன்று மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்மூலம் அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 46 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 50 சதவிகிதமாக உயர்கிறது.
இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.12,868.72 கோடி செலவாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுக, அதிமுக விருப்ப மனு தாக்கல் நிறைவு : அடுத்த கட்டம் என்ன?
மாநிலங்களை மதிக்கும் மத்திய அரசு தேவை : ஸ்டாலின்