UGC-NET 2024 Exam : ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் தேர்வு மற்றும் ஒத்திவைக்கப்பட்ட சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு, என்சிஇடி தேர்வுகளுக்கான புதிய தேர்வு கால அட்டவணையை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
கடந்த மே 5 ஆம் தேதி தேசிய தேர்வு முகமையினால் நடத்தப்பட்ட இளநிலை நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு நடந்ததாக மாணவர்கள் அளித்த புகார் எழுந்தது. இந்த வழக்கில் சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும் இந்த முறைகேடுகள் காரணமாக தேர்வை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் கோரிக்கை போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதனைத்தொடர்ந்து வினாத்தாள் கசிவு கார்ணமாக கடந்த ஜூன் 18 ஆம் தேதி தேசிய அளவில் நடைபெற்ற யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.
அதன்பின்னர் ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவிருந்த முதுகலை நீட் தேர்வும், ஜூன் 25 முதல் 27 வரை நடைபெறவிருந்த சிஎஸ்ஐஆர்- யுஜிசி- நெட் தேர்வும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் ஒத்திவைப்பதாக அறிவிக்கபட்டது.
இதனால் நாடுமுழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், யு.ஜி.சி நெட் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர் யுஜிசி நெட் ஆகிய தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தற்போது அறிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதன்படி,
யு.ஜி.சி நெட் தேர்வு – ஆகஸ்ட் மாதம் 21 மற்றும் செப்டம்பர் 4 தேதிகளுக்கிடையே நடைபெறும். (ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது
சி.எஸ்.ஐ.ஆர் யுஜிசி நெட் தேர்வு – ஜூலை 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும்.
என்.சி.இ.டி தேர்வு – ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும்.
அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவு தேர்வு – ஏற்கெனவே திட்டமிட்டப்படி ஜூலை 6ஆம் தேதி நடைபெறும்.
இந்த அனைத்துத் மறுதேர்வுகளும் கணினி வழியில் நடைபெற உள்ளது. (ரத்து செய்யப்பட்ட யுஜிசி நெட் 2024 தேர்வு ஓஎம்ஆர் முறையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த வடிவேலு
கள்ளச்சாராய மரணங்களைத் தடுக்க ’மலிவு விலையில் மது’: ஸ்டாலின் திட்டம்?