வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையை தொடர்ந்து மூன்றாவது மாதமாக எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் சிலிண்டருக்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதம் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை 4 மாதங்களாக குறைந்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் விலை உயர்ந்தது. தொடர்ந்து செப்டம்பர் மாதம் சிலிண்டர் விலை ரூ.38 உயர்ந்து ரூ.1,855க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், அக்டோபர் 1ஆம் தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளது.
அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.48 உயர்ந்து ரூ.1,903க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மூன்றாவது மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்து வருவதால் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் ரூ.818.50க்கு விற்பனையாகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
குடும்ப தகராறில் கொடூரம்: தாயை உயிரோடு எரித்துக்கொன்ற மகன்கள்!
மருத்துமனையில் ரஜினி : நலம்பெற ஸ்டாலின் வாழ்த்து!