வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை, மாதத்தின் முதல் நாளான இன்று (செப்டம்பர் 1) உயர்ந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் 1ஆம் தேதி நிர்ணயம் செய்து வருகின்றன.
அந்த வகையில் கடந்த மாதம் ஆகஸ்ட் 1ம் தேதி வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 7.50 உயர்ந்தது.
இதன் மூலம், சென்னையில் கடந்த ஒரு மாதமாக 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் 1,817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.
19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் 38 ரூபாய் அதிகரித்து சென்னையில் இன்று முதல் 1,855 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை 818.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலையிலும் மாற்றமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34க்கும் விற்பனையாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வேலைவாய்ப்பு : அண்ணா பல்கலையில் பணி!
மீண்டும் பயங்கரம்: மாட்டிறைச்சி சாப்பிட்டதாக தொழிலாளி அடித்துக்கொலை!