வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த ரிமால் புயல் நேற்று (மே 26) இரவு கரையை கடந்தது.
ரிமால் புயல் நேற்று அதிதீவிர புயலாக வலுப்பெற்றது. இந்தநிலையில், வங்கதேசம் – மேற்குவங்கம் கடற்கரை இடையே நேற்று இரவு 10.30 மணியிலிருந்து புயல் கரையை கடக்க தொடங்கியது.
புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 135 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இரவு 12.30 மணிக்கு புயல் முழுமையாக கரையை கடந்தது.
சவுத் 24 பர்கான்ஸ், கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும், சூரைக்காற்று வீசியதால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
சேதமடைந்த மரங்கள், மின்கம்பங்களை சீர்செய்யும் பணியில் 15 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு படகு மூலம் அழைத்து செல்லுதல், நிவாரண உதவிகளை பேரிடர் மீட்புபடையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
புயல் காரணமாக மேற்குவங்கம், திரிபுரா மாநிங்களிலும், வங்கதேச கடற்கரை பகுதிகளிலும் கனமழை பெய்தது. தொடர்ந்து இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்கத்தில் 1.10 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டனர். விமானம், பேருந்து, பஸ் போன்ற போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் மற்றும் மீட்புபடை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : துணைவேந்தர்கள் மாநாடு முதல் வானிலை அப்டேட் வரை!