வங்கக்கடலில் புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்தியா

தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சியானது புயல் சின்னமாக உருமாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 19) எச்சரித்துள்ளது.

தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், 23 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும்.

வங்க கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில், மத்திய மேற்கு வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு மத்தியப் பகுதிகளை ஒருங்கிணைத்து நிலவும் வளிமண்டல சுழற்சியானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக உருமாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அக்டோபர் 22ஆம் தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும்.

தாழ்வு மண்டலமாக வலுவடைந்த பிறகு அது புயல் சின்னமாக மாறி வங்கக் கடலில் மத்திய – மேற்குப் பகுதியில் நிலைகொள்ளும் என்று அது தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட ’சிட்ரங்’ என்ற பெயர் வைக்கப்படும்.

தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், தற்போதைக்கு அதன் பாதை இதுவரை கணிக்கப்படவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.

மேலும், இது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறிய பிறகே இதுபற்றி மேலும் தகவல்களை கணிக்க முடியும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜெ.பிரகாஷ்

அனுமதி மறுப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட ஈபிஎஸ் கைது!

ஓ.பி.எஸ்சை வைத்து அதிமுகவை பிளக்கப் பார்க்கிறார் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *