தாமதமாக வெளியான கியூட் தேர்வு முடிவுகள்!

இந்தியா

மத்தியப் பல்கலைக்கழங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேர்வதற்கான, க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று (செப்டம்பர் 15) இரவு 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (செப்டம்பர் 16) அதிகாலை வெளியானது.

இந்தியாவிலுள்ள மத்திய பல்கலைக்கழங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கிவரக்கூடிய கல்லூரிகளில் இள நிலைப் படிப்புகளில் சேர்வதற்கு  2022-23 கல்வியாண்டு முதல், பொதுநுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று யூஜிசி தெரிவித்திருந்தது.

அதன்படி, மத்தியப் பல்கலைக்கழகங்களில் இள நிலை படிப்புகளில் சேர்வதற்கான க்யூட் நுழைவுத் தேர்வு ஜூலை  16 முதல் ஆகஸ்ட் 30 வரை 6 கட்டங்களாக நடைபெற்றது.

cuet ug 2022 result declared at cuet.samarth.ac.in

இந்தத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தியது. இந்தியா முழுவதும் 61.86 லட்சம் பேர் க்யூட் நுழைவுத் தேர்வை எழுதினர்.

அதிகபட்சமாக உத்திரபிரதேச மாநிலத்தில், 2,92,589 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.

இந்தியா முழுவதும் 547 நகரங்களில் க்யூட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்தியா தவிர்த்து இலங்கை, கத்தார், மலேசியா, குவைத் உள்ளிட்ட 13 நாடுகளிலும் தேர்வு நடைபெற்றது.

cuet ug 2022 result declared at cuet.samarth.ac.in

க்யூட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து, 90 பல்கலைக்கழகங்கள், 44 மத்திய பல்கலைக்கழங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளனர்.

நேற்று (செப்டம்பர் 15) இரவு 10 மணியளவில் க்யூட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று (செப்டம்பர் 16)  அதிகாலை 4 மணியளவில் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானது.

இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கியூட் தேர்வு முடிவுகளை  cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

செல்வம்

தலைமை செயலகத்திற்கு அம்பேத்கர் பெயர்:பாஜகவுக்கு செக் வைத்த கே.சி.ஆர்.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.