இன்னும் சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்க உள்ளது. இதனையடுத்து தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட இன்று (டிசம்பர் 31) மதியம் முதலே குவிந்து வருகின்றனர்.
இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு 3 லட்சம் மக்கள் புதுச்சேரிக்கு வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மக்கள் கூட்டத்தில் குற்றச்செயல்கள் எதுவும் நிகழாதிருக்கும் வண்ணம் அங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர்(எஸ்.எஸ்.பி) கலைவாணன் ஐபிஎஸ் தலைமையில் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பார் வசதி உடைய மதுக்கடைகள் நள்ளிரவு 1 மணிவரையும், பார் வசதி இல்லாத மதுக்கடைகள் இரவு 11 மணி வரையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக புதுச்சேரி பீச் ரோட்டில் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டமாக 6 நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதனையடுத்து கடற்கரையை நோக்கி மக்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

கூட்டத்தில் குழந்தைகள் ஒருவேளை காணாமல் போனால், அவர்களை கண்டுபிடிப்பதற்கு வசதியாக புதுச்சேரிக்குள் நுழையும் குழந்தைகளின் கையில் பெற்றோர் பெயர், மொபைல் எண்கள் எழுதப்பட்ட டேக்குகள் அணிவதற்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
மேலும் கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு கடற்கரைக்கு 5 கி.மீட்டருக்கு முன்னதாகவே 10 இடங்களில் கார் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து பீச் ரோட்டிற்கு செல்ல சிறப்பு இலவச பேருந்து வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி சட்டமன்றத்துக்கு பின்பு உள்ள செஞ்சி சாலையிலும் கார்கள், வேன்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, அங்கிருந்து பொதுமக்கள் நடந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுதவிர குற்ற நிகழ்வுகளை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் கூடும் இடங்களில் எல்லாம் சிசிடிவி கேமிரா, டிரோன் கேமிராக்களுடன் கண்காணிப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி
’35 சதவீத தொழில்வரி உயர்வு தான் புத்தாண்டு பரிசா?’ – எடப்பாடி கண்டனம்!
புத்தாண்டுக்கு நன்றி மட்டும் தான் ப்ரோ – அப்டேட் குமாரு!
2024… தமிழ்நாட்டில் செய்த சம்பவங்கள்!
2024 : சங்கி முதல் கங்குவா பிளாப் வரை… சினிமா உலகம் சந்தித்த சம்பவங்கள்!
குமரியில் கண்ணாடி பாலம் கட்டியது யார்? – எடப்பாடிக்கு எ.வ.வேலு பதில்!