covid19 infection increase in Kerala

கேரளாவில் திடீரென அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு!

இந்தியா

கேரளாவில் ஒரே மாதத்திற்குள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 768 ஆக அதிகரித்துள்ளது. covid19 infection increase in Kerala

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று அடுத்த இரண்டு ஆண்டுகளில் பல லட்சக்கணக்கான உயிர்பலிகளை வாங்கியுள்ளது. இதுவரை உலகளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69 லட்சமாக உள்ளது என worldometers இணையதளம் குறிப்பிடுகிறது.

எனினும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

திடீரென அதிகரித்த கொரோனா தொற்று!

இந்த நிலையில் நாட்டிலேயே கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு உள்ள வலுவான மருத்துவ கட்டமைப்பு மூலம் கொரோனா தொற்றை தொடர்ந்து கண்காணித்து வருவதே அதற்கு காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் கேரளாவில் தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 12ல் இருந்து திடீரென 150 ஆக உயர்ந்துள்ளது.

அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, கடந்த 10 நாட்களில் மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக நேற்று (டிசம்பர் 13) ஒரேநாளில் 230 பேர் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தற்போது 768ஆக உயர்ந்துள்ளது.

மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்!

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, அதிக காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் மார்பு சளி போன்ற அறிகுறிகளை முன்வைத்து கிளினிக்குகளில் மருத்துவ உதவியை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் 11,700 க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதில் தீவிர சிகிச்சைக்காக 170 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டிய தேவையில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கேரளாவை சேர்ந்த பிரபல நுரையீரல் மருத்துவப் பேராசிரியரான டாக்டர் பி எஸ் ஷாஜஹான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ”காய்ச்சலால் பாதிக்கப்படும் நபர்களில் ஒரு சதவீதத்தினருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.

இதனால் மக்கள் பீதி அடையத் தேவையில்லை. எனினும் முதியவர்கள் மற்றும் ஏற்கனவே சுவாச பிரச்சனை உள்ள நோயாளிகள் பொது இடங்களில் முகமூடிகளை அணிவது அவசியம்” என்று ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு மின் கணக்கீடு கிடையாது! – தமிழ்நாடு அரசு

covid19 infection increase in Kerala

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *