கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதர அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து பெரும் எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 752 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளன. இது நேற்று பதிவான நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம். கடந்த ஏழு மாதங்களில் இதுவே அதிகபட்சம்.
மேலும் கொரோனா தொற்றால் நேற்று ஒருவர் இறந்த நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
அண்டை மாநிலமான கேரளாவில் மட்டும் நேற்று ஒரேநாளில் 565 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,420 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் புதிய மரபான JN.1 சமீப காலமாக வேகமாக உயர்ந்து வருவது அதிகாரிகள் மற்றும் சுகாதார நிபுணர்கள் மத்தியில் கவலையை எழுப்பியுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் முக கவசம் அணிந்து செல்லவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”மரியாதை குறைவாக எந்த வார்த்தையும் பேசவில்லை” : உதயநிதி ஸ்டாலின்
’திசை திருப்பும் நிர்மலா சீதாராமன்… வாபஸ் பெற வேண்டும்’: சு.வெங்கடேசன்
“வாழ்த்து சொல்ல வந்தேன்”: ED அலுவலகத்தில் ஆஜரான கார்த்தி சிதம்பரம்