Covid 19 cases increase in world
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் 69 லட்சம் பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறிபட்ட பிறகே, ஓரளவு கட்டுக்குள் வந்தது. இருப்பினும், கொரோனா வைரஸ் முழுமையாக உலக நாடுகளை விட்டு நீங்கவில்லை. தொடர்ந்து கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகள் மத்தியில் இருந்துகொண்டே தான் இருக்கிறது.
இந்தியாவை பொறுத்தவரை தற்போது ஜேஎன் 1 வகை கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்பிணி தாய்மார்கள், குழந்தைகள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில், உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 லட்சமாக உயர்ந்துள்ளது.
உலக அளவில் 70,25,19,084 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 67,34,73,176 பேர் குணமடைந்துள்ளனர், 69,74,692 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் 2,20,71,216 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக அமெரிக்காவில் 11,07,91,717 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 11,93,867 பேர் உயிரிழந்துள்ளனர், 10,84,97,739 பேர் குணமடைந்துள்ளனர், 11,00,111 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 124 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 4,50,25,312 ஆக உயர்ந்துள்ளது. . 4,44,90,452 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 5,33,445 உயிரிழந்துள்ளனர். தற்போது 1,415 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் 69 லட்சம் பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அப்பாவி விஜய் ஆண்டனி: “ரோமியோ” போஸ்டர் ரிலீஸ்!
நாடாளுமன்ற தேர்தல்: மக்கள் நீதி மய்யம் ஒருங்கிணைப்பு குழு அமைப்பு!
வேலைவாய்ப்பு : ஆவின் நிறுவனத்தில் பணி!
நெதர்லாந்தில் நடிகர் சூரி: குவியும் பாராட்டுகள்!
Covid 19 cases increase in world