அமெரிக்காவில் இது நாள் வரைக்கும் அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே கிரீன் கார்டு கிடைத்து விடும். இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதும், அந்த சட்டத்தை ரத்து செய்தார். பிப்ரவரி 20-ஆம் தேதியோடு இந்த சட்டம் காலாவதியாகிறது. இதனால், அங்கு வசிக்கும் வெளிநாட்டவர்கள் பதறி போய் இருக்கின்றனர். couples in US rush for C-section
தற்போது, 8 அல்லது 9வது மாதத்தில் இருக்கும் கர்ப்பிணி பெண்கள் சிசேரியன் மூலம் குழந்தைகளை வெளியே எடுக்க முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. birth right சட்டம் காலாவதியாக இன்னும் 19 நாட்கள் உள்ள நிலையில், குறை பிரசவத்தில் கூட குழந்தைகளை வெளியே எடுக்க பெற்றோர் முடிவு செய்து மருத்துவமனைக்கு ஓடியுள்ளனர்.
இது குறித்து, நியூஜெர்சியில் குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரியும் எஸ்.டி .ராமா கூறுகையில், “குழந்தைகளை முன்னரே அறுவை சிகிச்சை செய்து எடுப்பது குறித்து பலரும் விசாரித்து வருகின்றனர். 7 மாத கர்ப்பிணி ஒருவர் தனது கணவருடன் வந்து குழந்தையை அறுவை சிகிச்சை செய்ய கேட்கிறார். அவருக்கு மார்ச் மாதம்தான் குழந்தை பிறக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு டாக்டரான முக்காலா கூறுகையில், “குறை பிரசவத்தில் குழந்தைகளை அறுவை சிகிச்சை செய்து எடுப்பது ஆபத்தானது. நுரையீரல் முழுமையாக வளர்ந்திருக்காது. குழந்தைகளின் குறைவான எடை நரம்பு மண்டலத்தில் பிரச்னைகளை உருவாக்கும் என்று கூறி 15 கர்ப்பிணி பெண்களுக்கு அறிவுரை கூறி அனுப்பியுள்ளேன்” என்கிறார்.
முன்னதாக, அமெரிக்காவில் பெற்றோர் அந்த நாட்டு குடியுரிமை பெற்றவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அங்கு பிறக்கும் குழந்தைகள் தானாகவே அந்த நாட்டு குடிமகனாகி விடும் நிலை இருந்தது. பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு பிறகு பிறக்கும் குழந்தைகள் அந்த நாட்டில் நிரந்தரமாக வசிக்க முடியாத நிலை ஏற்படும். பல சலுகைகளும் ரத்தாகி விடும் நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்காவில் H-1B விசாவில் உள்ள இந்திய மக்களுக்கு குழந்தை பிறந்தால் அமெரிக்க குடிமகனாவது முக்கிய பாதுகாப்பாக இருந்தது. குழந்தை அமெரிக்க குடிமகனாக மாறினால் பெற்றோரும் அமெரிக்க குடிமகனாகி விடுவார்கள்.
தற்போது, birth right பறிக்கப்படுவதால் பல குழந்தை பிறப்பை எதிர்நோக்கியுள்ள இந்திய வருங்கால பெற்றோர் சோகமடைந்துள்ளனர்.அமெரிக்கா குடியுரிமை பெறுவதற்காக பல தியாகங்களை செய்துள்ளோம். இப்போது, எல்லாவற்றையும் இழந்த நிலையில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
இது தவிர எல் 1 விசாவிலும் ஏராளமான இந்தியர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர். இந்த பெற்றோருக்கு குழந்தை பிறந்தாலும் தானாகவே அமெரிக்க குடிமகனாகி விடும். தற்போது, அதுவும் பறிபோயுள்ளது. couples in US rush for C-section