கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற யூடியூபர் தம்பதி திடீரென உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் பாறசாலை கிணற்றுமுக்கு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி பிரியா. இந்த தம்பதிக்கு சேது என்ற மகனும், பிரீது என்ற மகளும் உண்டு. இருவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வரும் நிலையில், கணவன் மனைவி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர். கட்டடத் தொழிலாளியான செல்வராஜ் தனது மனைவியின் உதவியுடன் யூடியூப் சேனல் தொடங்கியுள்ளார். செல்லுல பேமிலி என்ற அந்த யூடியூப் சேனலில் 18 ஆயிரம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். 1,400 வீடியோக்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளன. அதில் , பெரும்பாலானாவை பிரியாவின் சமையல் குறிப்பு வீடியோக்கள்.
இவர்கள் பதிவிட்ட வீடியோக்களுக்கு முதலில் நல்ல வியூஸ் வந்துள்ளது. இதனால், தம்பதி இருவரும் புகழடைய ஆரம்பித்தனர். இதனால் கட்டடத் தொழிலை விட்டுவிட்டு முழுநேர யூடியூபராகவே மாறினார். அதில் அவ்வப்போது வருமானம் வந்த போதும், சில சமயங்களில் வருமானம் இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து, உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். இறப்பதற்கு முன்பு இறப்பை தேடி ஒரு பயணம் என்கிற பாடலுடன் ஒரு வீடியோவை தங்கள் சேனலில் பதிவேற்றியுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் மகன் சேது தந்தைக்கு போன் செய்துள்ளார். ஆனால் தந்தை போனை எடுக்கவில்லை. தொடர்ந்து, நேரே பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார் சேது. வீட்டில் தாய் பிரியா விஷம் குடித்த நிலையில் கட்டிலில் இறந்து கிடந்தார். தந்தை செல்வராஜ் தூக்கில் பிணமாகத் தொங்கியபடி கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த சேது இருவரது உடலையும் பார்த்து கதறி அழுதார். தகவல் அறிந்து வந்த பாறசாலை போலீசார் இரு உடல்களையும் மீட்டு வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
விசாரணையில், யூடியூப்பில் போட்ட வீடியோக்களுக்கு முன்பு போல் வியூஸ்கள் வரவில்லை என்பதால் உயிரை மாய்த்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு மகளுக்கு திருமணம் நடந்த பிறகு, இந்த தம்பதி பணக்கஷ்டத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மகாராஷ்டிரா தேர்தல்: நாமினேஷன் தேதி முடிந்த பின்பும் நீடிக்கும் குழப்பம்!
இந்தியாவுக்கு ரகசியமாக வந்து தங்கியிருக்கும் மன்னர் சார்லஸ்
ஒரு சில அரைகுறை நாதாரிங்க, வியாபாரத்துல நஷ்டம்னா தற்கொலைக்குப் போற மாதிரி, இதுலயும் இப்படி முடிவு எடுத்துட்டாய்ங்களோ? என்ன இருந்தாலும் இந்த மாதிரி செய்யுறது கேண குஸ்கா வேலைதான்