உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு எந்த வகையிலும் பலனளிக்கவில்லை என்று ரஷ்ய அதிபர் புதின் விமர்சித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. ஓராண்டுக்கு மேலாக நீடித்து வரும் இந்த போரில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்தப் போரில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியோடு ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போரிட்டு வருகிறது. உக்ரைன் ராணுவத்திற்கு தேவையான ஆயுத உதவி, பொருளாதார உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. மேலும் அபாயகரமான ஆயுதமாக கருதப்படும் ‘கிளஸ்டர்’ குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்திருப்பதாக அண்மையில் அமெரிக்கா தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு எந்த வகையிலும் பலனளிக்கவில்லை என்று ரஷ்ய அதிபர் புதின் விமர்சித்துள்ளார். உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து ரஷ்ய படைகளை வெளியேற்ற உக்ரைன் ராணுவம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து வருவதாகவும், மேற்கத்திய நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட பீரங்கிகள், வெடிகுண்டுகள், கவச வாகனங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றால் எந்த பலனும் இல்லை என்றும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ராஜ்
அரசாணை ஊதியம்: வேலை நிறுத்தத்தில் ஈடுபட தூய்மைப்பணியாளர்கள் முடிவு!
டன்னுக்கு ரூ.95 உயர்வு: கலங்கி நிற்கும் கரும்பு விவசாயிகள்!