மீண்டும் கொரோனா: அதிக பாதிப்புக்குள்ளான மாநிலம் எது?

இந்தியா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதில் அதிகபட்சமாக கர்நாடகத்தில் 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரத்தில் 50 பேருக்கும், ராஜஸ்தானில் 11 பேருக்கும், தமிழ்நாட்டில் 9 பேருக்கும், தெலங்கானாவில் 8 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று 357 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், சென்னை மாவட்டத்தில் 14 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 பேருக்கும், திருவாரூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலா 2 பேருக்கும், திருவள்ளூர், திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், தஞ்சாவூர், மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 29 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து 20 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 9 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

நாட்டில் இதுவரை 4,054 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். தலைநகரான டெல்லியில் நேற்று மட்டும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் செளரப் பரத்வாஜ், ”சராசரியாக ஒரு நாளுக்கு 400 – 500 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகிறது. ஒரு நாளுக்கு சராசரியாக பதிவாகும் விகிதம் இன்னும் அதிகரிக்கவில்லை என்பதே ஒரே நேர்மறையான விஷயம். நேற்று 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: பற்களில் மஞ்சள் கறை… நீக்குவது எப்படி?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: கிரில்டு கார்ன்!

சரிகிறதா ‘சலார்’ வசூல்?… கலெக்‌ஷன் எவ்வளவு?

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *