பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து கொரோனா பரவலை முன்னிட்டு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்தது.
அதன்படி இந்தியாவில் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டு நாட்டு மக்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 16ம் தேதி முதல் அரசு செலுத்தி வருகிறது.
இந்தநிலையில் சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரசால் மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
முதல் கட்டமாக இந்த மருந்து தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூஸ்டராக பயன்படுத்தப்பட உள்ள இந்த மருந்து இன்று முதல் கொரோனா தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளலாம். இரண்டு சொட்டுக்கள் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா
கலைஞர் வரலாறு – திராவிடமும் சமூக மாற்றமும் புத்தக வெளியீட்டு விழா!
“அலறப்போகுது ஆண்டவரால் டெல்லி” – வைரலாகும் போஸ்டர்!