தாஜ்மஹாலைப் பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகையே அச்சுறுத்திய கொரோனா பரவல் இந்த ஆண்டு குறைந்திருந்தது. இதனால் மக்கள் ஊரடங்கு, முக கவசம் இன்றி பொது வெளிகளில் நடமாடத் தொடங்கினர்.
ஆனால் கடந்த சில தினங்களாகச் சீனாவில் பிஎஃப்-7 ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் நேற்று (டிசம்பர் 21) இந்தியாவில் குஜராத்தில் 2 பேருக்கும் ஒடிசாவில் ஒருவருக்கும் உறுதிசெய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தி வருகிறது. தற்போது நாடாளுமன்றத்தில் முக கவசமும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஆக்ரா மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரி அனில் சத்சங்கி கூறுகையில், “சுகாதாரத் துறை ஏற்கனவே தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
விழிப்புணர்வுடன் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மோனிஷா
அப்பாக்களைக் காக்கும் மகள்கள்: சட்டப் போராட்டத்தில் ஜெயித்த கேரள சிறுமி!