கொரோனா : ஏப்ரல் 10, 11ல் மருத்துவமனைகளில் ஒத்திகை!

Published On:

| By Kavi

வரும் ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் தடுப்பு நடைமுறைகள் தொடர்பாக மருத்துவமனைகளில் ஒத்திகை நடத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு தற்போது தொற்று பரவல் வேகமாக உள்ளது. தினசரி 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்நிலையில், அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்கள்/ கூடுதல் தலைமைச் செயலாளர்களுடன் இன்று (ஏப்ரல் 7) மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடினார்.

அப்போது அவர், “கொரோனாவின் முந்தைய பரவலின்போது செயல்பட்டது போல், தற்போதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும். மாநிலங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

2023-ம் ஆண்டு ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஒத்திகை நடத்த வேண்டும். ஏப்ரல் 8,9 ஆகிய தேதிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் தயார் நிலை குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்.

2023 ஏப்ரல் 7-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 10 லட்சத்துக்கு 100 சோதனைகள் என்ற விகிதத்தில் இருந்து ஆர்டி-பிசிஆர் சோதனை விகிதத்தை விரைவாக அதிகரிக்க வேண்டும்.

2023-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 571 ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 2023-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 4,188-ஆக உயர்ந்துள்ளதென மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. 2023-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், வாராந்திர கொரோனா தொற்று விகிதம் 3.02%-ஆக உள்ளது.

முதல் 2 டோஸ் தடுப்பூசி போடுவதில் 90% நிறைவு செய்திருந்தாலும், முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்துவது மிகவும் குறைவாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தகுதியுள்ள மக்களுக்கும், குறிப்பாக முதியவர்கள் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் போடுவதை அதிகரிக்க வேண்டும்.

இந்தியாவில் எட்டு மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் 10 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு மற்றும் ஹரியானா ஆகிய 5 மாவட்டங்களில் 5% அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளன. எனவே பொது விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேம்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

பிரியா

பிரதமர் வருகை: காவல்துறை பாதுகாப்பு ஒத்திகை!

“நிலத்த கொடுத்துட்டு பட்டினி கிடக்கனுமா” : டெல்டா விவசாயிகள் வேதனை!

corona mock drills
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.