சேதமடைந்த ஐபோன் XS டெலிவரி செய்தவருக்கு வட்டியுடன் ரூ.1,56,356 செலுத்த இ காமர்ஸ் தளமாக Tata Cliq மற்றும் Apple நிறுவனங்களுக்கு ஹரியானா சோனிபட் நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பிஜேந்தர் சிங் ஆஜராகி “2019-ஆம் ஆண்டு இ காமர்ஸ் தளமாக Tata Cliq-ல் ரூ.1,11,356 மதிப்பில் எனது கட்சிக்காரர் ஐபோன் XS வாங்கினார். மொபைல் டெலிவரி செய்தபோது சேதமடைந்திருந்தது.
இது குறித்து Tata Cliq நிறுவனத்திடம் முறையிட்ட போது பணத்தை திருப்பி தரவோ புதிய மொபைல் தரவோ முன்வரவில்லை” என்று முறையீடு செய்தார். சோனிபட் நுகர்வோர் ஆணைய தலைவர் விஜய் சிங் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
Tata Cliq தரப்பில், “புகார்தாரர் சேதமடைந்ததாக கூறும் ஐபோனுக்கு பதிலாக வேறு ஐபோனை மாற்றி அனுப்பியுள்ளார். எனவே ஐபோனை மாற்றுவதற்கான அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும் Tata Cliq நிறுவனம் என்பது ஆப்பிள் நிறுவனத்திற்கும் நுகர்வோருக்குமான இடைத்தரகர் மட்டுமே” என்று தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் வேறு ஐமொபைல் போனை மாற்றி அனுப்பியதான குற்றச்சாட்டை Tata Cliq மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் நிரூபிக்க தவறியதால் நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க சோனிபட் நுகர்வோர் ஆணைய தலைவர் உத்தரவிட்டார்.
அதன்படி, மனுதாரருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்காக ரூ.5,500 நான்கு வருடங்களில் போனின் விலையில் வட்டியுடன் ரூ.30 ஆயிரம் என மொத்தம் ரூ.1,56,356 வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகல்!
ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு நாளை ஒத்திவைப்பு!