ராகுல் காந்தி இன்று (செப்டம்பர் 27) 19ஆவது நாள் ஒற்றுமை நடைபயணத்தை, கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் தொடங்கி பண்டிக்காடு என்ற பகுதியில் நிறைவு செய்கிறார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், 2024-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறவும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கினார்.
இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் 3,570 கி.மீ ராகுல் நடைபயணம் செய்ய உள்ளார்.
தமிழகத்தில் 4 நாட்கள் தனது நடைபயணத்தை நிறைவு செய்த ராகுல் காந்தி, கேரள மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான மக்கள் ராகுல் காந்தியுடன் நடைபயணம் செய்து வருகின்றனர்.
இதுவரை 350 கி.மீ தூரம் நடைபயணம் செய்துள்ள ராகுல் காந்தி, கேரள மாநிலத்தின் திரிச்சூர், பாலக்காடு பகுதிகளில் தனது நடைபயணத்தை முடித்து இன்று காலை 6.30 மணியளவில் மலப்புரம் பகுதியில் துவங்கினார்.
இன்று காலை 11 மணியளவில் எம்எஸ்டிஎம் கலை அறிவியல் கல்லூரி அருகே, சிறிது நேரம் ஓய்வு எடுக்கின்றனர். பின்னர் மாலை 5 மணிக்கு நடைபயணத்தை துவங்கும் ராகுல் காந்தி, பண்டிக்காடு சந்திப்பு பகுதியில் இரவு 7 மணிக்கு நிறைவு செய்கிறார். பின்னர் மலப்புரத்தில் உள்ள தச்சின்கானந்தம் உயர்நிலைப் பள்ளியில் இரவு ஓய்வு எடுக்கிறார்.
கர்நாடகா மாநிலத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் ராகுல் காந்தி நடைபயணத்தை துவங்க உள்ளார். கர்நாடக மாநிலத்தில் 21 நாட்கள் ராகுல் காந்தி நடைபயணம் செய்ய உள்ளார்.
செல்வம்
ஆ.ராசாவை கண்டித்து முழு அடைப்பு போராட்டம்: பள்ளிகளுக்கு விடுமுறை!
சென்னையில் துவங்கும் பத்து தல படப்பிடிப்பு!