காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (அக்டோபர் 17) காலை 10 மணிக்கு துவங்கியது.
புதிய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல், நாடு முழுவதும் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட 9,300 காங்கிரஸ் உறுப்பினர்கள் புதிய காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் முடிவு அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகும்.
அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக நாடு முழுவதும் 58 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர், காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் வேட்பாளர்களாக உள்ளனர்.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் தங்களது வாக்கினை செலுத்துகின்றனர்.
ராகுல் காந்தி ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டிருப்பதால், கர்நாடகாவில் தனது வாக்கினை செலுத்த உள்ளார்.
தமிழகத்தில் 211 காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள். சென்னை சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
செல்வம்
டி20 உலகக் கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா!
பிரின்ஸ், சர்தார் படங்களின் காட்சி நேரம் மாற்றம்!