கேரள வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரை காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
கேரளாவில் உள்ள 20 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் 15 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது.
ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக 16 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில், தற்போதைய நிலவரப்படி,
காங்கிரஸ் – 14 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, கேரள காங்கிரஸ் போன்ற கட்சிகள் தலா 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாக்கு எண்ணிக்கையில் தாமதம் : தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்!