Drugs banned by the central Govt

மத்திய அரசு தடை விதித்துள்ள மருந்துகள் எவை, எவை?

இந்தியா

காய்ச்சல், சளி போன்றவற்றுக்கான வலி நிவாரணிகள், மல்டி வைட்டமின்கள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) என பொதுவாகவும் பரவலாகவும் அளிக்கப்படும் 156 வகையான கூட்டு மருந்துகள் தடை செய்யப்படுகின்றன என்று சமீபத்தில் மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அந்தப் பட்டியலில் Fixed Dose Combination (FDC) வகையைச் சேர்ந்த மருந்துகளான Amylase, Protease, Glucoamylase, Pectinase, Alpha Galactosidase, Lactase, Beta-Gluconase, Cellulase, Lipase, Bromelain, Xylanase, Hemicellulase, Malt diastase, Invertase, Papain ஆகியவை மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதேநேரத்தில் இதற்கான பாதுகாப்பான மாற்று மருந்துகள் உள்ளன.

ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளுடன் இணைந்த மருந்துகள் FDC மருந்துகள் என அழைக்கப்படுகின்றன.

இத்தகைய மருந்துகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நிபுணர் குழுவை அமைத்தது.

இந்த நிபுணர் குழு நடத்திய ஆய்வில், FDC வகை மருந்துகளில் நோயை குணப்படுத்தும் கூறுகள் இல்லை என்பது தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

FDC மருந்துகள் குறித்து ஆய்வு நடத்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (Drugs Technical Advisory Board), “FDC மருந்துகள் நிவாரணம் தரக்கூடியவை என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. அதோடு அவை மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

எனவே, பொது நலன் கருதி, மருந்துகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் 1940-ன் பிரிவு 26A-ன் கீழ், FDC-யின் உற்பத்தி, விற்பனை அல்லது விநியோகத்தைத் தடை செய்வது அவசியம்’ என்று பரிந்துரைத்துள்ளது.

எனவே, இத்தகைய மருந்துகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யக்கூடாது” என்று கூறப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலில் முடி சிகிச்சைகள், தோல் பராமரிப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள் ஆகியவையும் அடங்கும்.

மேலும், மொத்தம் 34 மல்டி வைட்டமின்கள் குறித்து தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அளவு தாண்ட வேண்டாம்!

டாப் 10 நியூஸ் : சுய உதவி குழுக்களுக்கு நிதி வழங்கும் பிரதமர் முதல் சட்டம் என் கையில் பட அப்டேட் வரை!

விஜய்யின் வெயிட் என்ன? ஸ்டாலின் எடுத்த அவசர சர்வே!

கிச்சன் கீர்த்தனா : கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: வீட்டிலேயே செய்யலாம் ரசகுல்லா!

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *