குடியரசு தின விழாவில் ஆளுநர் உரையின் போது, காவல் ஆணையர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடு முழுவதும் 76வது குடியரசு தினம் இன்று (ஜனவரி 26) விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவரும், ஒவ்வொரு மாநில தலைநகரில் ஆளுநரும் இன்று தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தனர்.
அதன்படி கேரளாவின் திருவனந்தபுரத்தில் அம்மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் தேசியக்கொடி ஏற்றினார். தொடர்ந்து விழாவில் அவர் உரையாற்றினார்.
அப்போது அவர் அருகே நின்று கொண்டிருந்த திருவனந்தபுரம் நகர காவல் ஆணையர் தாம்சன் ஜோஸ் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் மேடையில் சில நிமிடங்கள் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனைக்கண்ட ஆளுநரும் முதலுதவி அளிக்க உத்தரவிட்டார்.
தாம்சனை அங்கிருந்த ஆளுநர் பாதுகாப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.. அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.