அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில் இருந்து வாஷிங்டனில் உள்ள ரீகன் விமான நிலையத்திற்கு 60 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்றது. collision US jet and chopper
அமெரிக்க நேரப்படி இரவு 9 மணி அளவில், ரீகன் விமான நிலையத்தின் 33 வது ஓடுபாதையில் தரையிறங்க விமானம் முயன்று கொண்டிருந்தது.
இந்த சமயத்தில் எதிரே வந்த அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மீது மோதியது. இதில், இரு இயந்திர பறவைகளும் வெடித்து சிதறி அருகிலுள்ள போடோமெக் நதியில் விழுந்தன.
வாஷிங்டன் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை அதிகாரிகள், விமானத்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர்.
இதுவரை 19 பேரின் உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன. வெள்ளை மாளிகையில் இருந்து 5 கி.மீ தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மிகவும் பாதுகாக்கப்பட்ட வான் பகுதியில் இத்தகைய மோசமான விபத்து நிகழ்ந்தது அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் 3 பேருடன் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர். விபத்து தொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “விமானத்தை பார்த்ததும் ஏன் ஹெலிகாப்டர் விலகி செல்லவில்லை. தரை கட்டுபாட்டு அதிகாரிகள் ஏன் தேவையான உத்தரவிடவில்லை.
விமானத்தை பொறுத்தவரை, எந்த தவறும் இல்லை. விமானம் சரியாகவே ரன்வேயை அணுகி கொண்டிருந்துள்ளது. ஹெலிகாப்டரை இயக்கியவர்கள் மீதுதான் தவறு இருக்கிறது. இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்க கூடியது. இத்தகைய மோசமான சூழலை தவிர்த்திருக்கலாம்.இது நல்லதல்ல” என்று சோசியல் மீடியாவில் தெரிவித்துள்ளார். collision US jet and chopper