ஊழியர்களை நீக்கும் காக்னிசண்ட், அசெஞ்சர்!

இந்தியா

போலியான ஆவணங்கள் மற்றும் அனுபவ கடிதங்கள் மூலம் வேலைக்கு சேர்ந்த 6 சதவிகித ஊழியர்களை காக்னிசண்ட் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.

இந்தியாவின் காக்னிசண்ட் நிறுவன தலைவர் ராஜேஷ் நம்பியார், காக்னிசண்ட் இந்தியா நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவர்களின் பின்னணியை சரிபார்க்காததால், இந்நிறுவனத்தின் 6 சதவிகித ஊழியர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வேலைக்கு சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

போலி ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு, செப்டம்பர் காலாண்டில் மட்டும் காக்னிசண்ட் நிறுவனம் தனது நிறுவனத்தில் வேலை செய்த 1000 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

காக்ணிசண்ட் நிறுவனத்தை தொடர்ந்து அசெஞ்சர் நிறுவனமும் போலி ஆவணங்கள் மூலம் வேலைக்கு சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் திறனில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க போலி ஆவணங்கள் மூலம் வேலைக்கு சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளது.

இருப்பினும் அசெஞ்சர் நிறுவனம் புதிய ஆட்களை பணியமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. கோவிட் பெருந்தொற்றின் போது ஏராளமானோர் போலி ஆவணங்களை கொடுத்து வேலையில் சேர்ந்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போலி கடிதங்கள் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் வேலைக்கு சேர்ந்ததால், ட்விட்டர், மெட்டா போன்ற நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் பேரை நீக்கியுள்ளது.

நிறுவனங்கள் இதுபோன்ற பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்

குறிப்பாக பணி அமர்த்துவதில் ஏற்படும் கால தாமதத்தினாலும், நிறுவனங்கள் விரைவான பணியமர்த்துதலை விரும்புவதாலும், பின்னணி சரிபார்ப்பு நடவடிக்கைகளில் ஐடி நிறுவனங்கள் ஈடுபடுவதில்லை.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரண்டு வருடங்களாக வேலைக்கு ஆட்கள் எடுக்கும் செயல்முறை இணையம் மூலமாக மட்டுமே நடைபெற்றது.

இதனால் போலி ஆவணங்கள் சமர்பித்து வேலைக்கு சேர்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் பட்ஜெட் பற்றாக்குறை, ஊழியர்களின் மோசமான செயல்திறன் உள்ளிட்ட காரணங்களால், எச்.சி.எல்.நிறுவனம் 350 பேரை பணி நீக்கம் செய்தது.

செல்வம்

மோர்பி விபத்து : அமைச்சருக்கு வாய்ப்பு மறுத்த பாஜக!

குஜராத் தேர்தல்: பிரபல கிரிக்கெட் வீரர் மனைவி போட்டி!

2 மாத சிறை வாசம் முடிந்து வெளியே வந்தார் தீஸ்தா சீதல்வாட்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *