தினமும் 3 மணி நேரம் மட்டுமே உறக்கம்… பைக்கிலேயே உயிரிழந்த ஆர்டர் கிங்!

இந்தியா

சீனாவில் ‘ஆர்டர் கிங்’ என்று அழைக்கப்படும்  உணவு டெலிவரி செய்யும் மனிதர் ஒருவர் தினமும் 18 மணி நேரம் வேலை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். அந்த மனிதரின்  பெயர் யுவான் என்பதாகும். இவர், ஹாங்சூ மாகாணத்திலுள்ள ஷெஜியாங் நகரத்தை சேர்ந்தவர். இவர், 24 மணி நேரமும் வேலை வேலை என்றே ஓடிக் கொண்டிருப்பார்.

ஆர்டர்களை முடித்து விட்டு, அப்படியே தனது பைக்கிலேயே உறங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால், இவருக்கு ஆர்டர் கிங் என்ற பெயர் உண்டு. அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பு யுவான் இரவு பகலாக உழைத்துள்ளார். பின்னர், தனது பைக்கிலேயே உறங்கியுள்ளார்.

அப்படியே இறந்தும் போனார். கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி இவர் தனது பைக்கிலேயே இறந்து கிடந்ததை பார்த்த மற்றொரு டெலிவரி ஊழியர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பொதுவாக இவருக்கு நாள் ஒன்றுக்கு 500 முதல் 600 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.40,000 – 48,000 வரை சம்பாதித்துள்ளார்.மழை நாட்களில் யுவானுக்கு நாள் ஒன்றுக்கு 49 ஆயிரம் வரை வருமானம் கிடைத்துள்ளது.

தினமும் அதிகாலை 3 மணி வரை வேலை செய்துவிட்டு, காலை 6 மணிக்கு எழுந்து மீண்டும் டெலிவரி வேலையைத் தொடர்வார் என்று கூறப்படுகிறது. அதாவது தினசரி 3 மணி நேரம்தான் அவர் உறங்கியுள்ளார். இறந்த தினத்திலும் ஆர்டர் வந்தால் கண் விழித்து ஓட்டுவதற்காகவே பைக்கில் உறங்கியுள்ளார்.

யுவானுக்கு 16 வயதில் ஒரு மகன் உண்டு. மகனின் நல் வாழ்க்கைக்காக  அவருடைய  கல்விக்காக  யுவான் இப்படி ஓடி ஓடி  உழைத்ததாக தெரிகிறது.

சீனாவில் மெய்டுனா, இலி ஆகிய இரு உணவு விநியோக நிறுவனங்கள்  பிரபலமாக உள்ளன. இந்த இரு நிறுவனங்களில் ஒரு கோடி பேருக்கும் மேல் டெலிவரி நபராக பணி புரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்டர் கிங் பலியானதையடுத்து,  ஆர்டர் கிங்  சென்று விட்டார்.  இந்த அவலங்களைத் தவிர்க்க வழி இல்லையா? என்று  ஒருவர் ஆவேசமாக கேட்டுள்ளார். மற்றொரு நபர், “ அவருடைய குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்தார். இரவும் பகலும் உழைத்தார். இனியாவது அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அவரது அடுத்த ஜென்மத்தில் அவர் இப்படி வாழ்க்கையை  எதிர்த்து போராடமாட்டார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

ஓடி ஓடி யுவான் சேர்த்த யுவானுக்கு இனி யார் ஆர்டர் கொடுப்பார்? உயிர் முக்கியம்யா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

”என் மகன் என்கவுண்டருக்கு சம்போ செந்தில் தான் காரணம்”: காக்காதோப்பு பாலாஜியின் தாய் கண்ணீர்!

புரட்டாசி மாத நட்சத்திர பலன் – சித்திரை! (17.09.2024 முதல் 17.10.2024 வரை)

+1
1
+1
2
+1
9
+1
6
+1
3
+1
3
+1
24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *