39 பேருடன் மூழ்கிய சீனப் படகு: மீட்புப்பணியில் இந்தியா!

Published On:

| By Kavi

நடுக்கடலில் 39 பேருடன் மூழ்கிய சீன மீன்பிடி படகு மீட்புப் பணியில், சீன கடற்படை கோரிக்கைவிடுத்தன் அடிப்படையில் இந்திய கடற்படை ஈடுபட்டு வருகிறது.

சீனாவைச் சேர்ந்த மீன்பிடி படகு நேற்று முன்தினம் இந்திய பெருங்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தது. அந்த மீன்பிடி படகில் சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 39 பேர் இருந்தனர்.

இதனிடையே, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த படகு திடீரென விபத்தை சந்தித்தது.

இதனால், படகு கடலில் மூழ்க தொடங்கியது. இந்தியப் பெருங்கடலில் 900 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து சீன கடற்படை இந்திய கடற்படைக்குத் தகவல் கொடுத்தது.

இதைத் தொடர்ந்து விபத்து நடந்த பகுதிக்கு இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் மற்றும் ரோந்து விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது வரை விபத்துக்குள்ளான படகில் இருந்து இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியோரின் நிலை என்ன என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எஞ்சியோரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தேடுதல் பணியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம், ஆஸ்திரேலிய கடற்படை, சீனக் கடற்படை உட்பட பல்வேறு நாடுகள் இணைந்துள்ளன.

ராஜ்

கள்ளச்சாராய மரணம்: ஆர்ப்பாட்டத்தை அறிவித்த பாஜக!

“நாட்டு மாடுகளை பாதுகாக்க வேண்டும்”: ஈஸ்வரன் வலியுறுத்தல்!

ரஜினியுடன் இணைந்த கபில்தேவ்

ஆட்சியமைக்க சித்தராமையாவுக்கு ஆளுநர் அழைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share