சீன அமைச்சர் வருகை: எல்லை பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா?

இந்தியா

ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சீனாவின் ராணுவ அமைச்சர் ஜெனரல் லி ஷாங்ஃபு நாளை (ஏப்ரல் 27) இந்தியாவுக்கு வருகை தர உள்ளார்.

அப்போது இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதன் மூலம் இந்திய – சீன எல்லை பகுதிகளில் அமைதி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீன ராணுவ அமைச்சர் இந்தியா வருகை தொடர்பாக சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘ஏப்ரல் 27ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இந்தியாவின் புதுடெல்லியில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.

இதற்கான அழைப்பின்பேரில், சீன ராணுவ அமைச்சர் ஜெனரல் லி ஷாங்ஃபு கலந்து கொள்கிறார். இந்தக் கூட்டத்தின்போது, ஜெனரல் லி, மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

மேலும், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளார். சர்வதேச மற்றும் பிராந்திய நிலவரம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற பிரச்சினைகள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள உள்ளார்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜெனரல் லீயின் வருகைக்கு முன்னதாக, கடந்த 23ஆம் தேதி சீன பகுதியில் உள்ள சுஷுல்-மோல்டோ எல்லையில் சீன-இந்திய படைப்பிரிவு கமாண்டர் அளவிலான 18ஆவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தை குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் சாதகமாக கருத்து தெரிவித்தது. எல்லைப் பகுதிகளில் அமைதியை பாதுகாப்பது மட்டுமின்றி, கிழக்கு லடாக் பகுதியில் மீதமுள்ள இடங்களில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்ப பெறும் பணிகளை விரைவுபடுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டன என்றும் சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையே மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த பதற்றத்துக்கு மத்தியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நெருங்கிய தலைவராகக் கருதப்படும் ஜெனரல் லியின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: கொத்தவரங்காய் வற்றல்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *