போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக களமிறங்கியுள்ள சீன விமானம்!

இந்தியா

போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு போட்டியாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சீன பயணிகள் விமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் பயணிகள் விமான தயாரிப்பில் முன்னிலையில் உள்ளன.

உலகில் செயல்பாட்டில் உள்ள பயணிகள் விமானங்கள் பெரும்பாலும் இந்த இரு நிறுவனங்களின் தயாரிப்பே ஆகும்.

இந்த நிலையில் சி-919 என்ற சீன விமானம், கடந்த ஏழாண்டுகளாக தயாரிப்பில் இருந்து வந்தது.

சீனப் பொருட்களைக் கொண்டே பெரும்பாலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில், சில வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்தளித்த சில பாகங்களும் இருக்கின்றன.

இந்த விமானம் 150-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்ல வல்லது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  164 இருக்கைகளை கொண்ட இந்த விமானம் நேற்று ஷாங்காயில் இருந்து 128 பயணிகளுடன் புறப்பட்டு பிஜீங் நகரில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இந்த விமானத்தை வைத்து , விமான தயாரிப்பு நிறுவனங்களான, போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய நிறுவனங்களுடன், அதிக லாபம் தரும் விமான விற்பனை சந்தையில் போட்டியிடலாம் என்று சீனா எதிர்பார்க்கிறது.

வெளுத்து வாங்கும் மழை: ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறுமா?

டிஜிட்டல் திண்ணை: ரெய்டுக்கு முன் வந்த போன் கால்…டென்ஷன் உதயநிதி, ரிலாக்ஸ் செந்தில்பாலாஜி

+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *