மக்கள் தொகையில் இந்தியா சீனாவை முந்தி விட்டது. இந்த நிலையில், சீன இளைஞர்கள் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் மொத்த மக்கள் தொகை 140 கோடியாக உள்ளது. இதில், 72 கோடி ஆண்கள் 69 கோடி பெண்கள் உள்ளனர். 100 பெண்களுக்கு 104 ஆண்கள் உள்ளனர். இதனால், தற்போதைய சீன இளைஞர்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைக்காத அவலம் ஏறபட்டுள்ளது. கிட்டத்தட்ட 3. 5 கோடி இளைஞர்கள் திருமணம் செய்ய பெண்கள் இல்லை.
இதனால், அங்குள்ள நிபுணர்கள் சீன இளைஞர்களை வெளிநாட்டு பெண்களை மணந்து கொள்ளும்படி அறிவுரை கூறியுள்ளனர். ரஷ்யா, பாகிஸ்தான், கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து தங்களுக்கு பொருத்தமான பெண்களை தேடிக் கொள்ளும்படி தியான்மென் பல்கலையின் பேராசிரியர் டிங் சாங்பா இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
சீன பாராம்பரியப்படி பெண்களுக்கு ஆண்கள்தான் வரதட்சணை கொடுக்க வேண்டும். திருமணத்துக்கு முன்பே சொந்த வீடு, கார் போன்ற வசதிகள் இருந்தால்தான் பெண் கொடுப்பார்களாம். இதன் காரணமாக, வரதட்சணை கொடுக்க முடியாத கிராமப்புற இளைஞர்கள் திருமணம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
சீனாவை பொறுத்த வரை பெண்களை விட ஆண்கள் 3 கோடி பேருக்கும் அதிகமாக உள்ளனர். அதே வேளையில், வெளிநாட்டு பெண்கள் என்றால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திருமணத்துக்கு சம்மதம் கூறுவார்கள் என்கிற எண்ணத்தில் வெளிநாட்டு பெண்களை திருமணத்துக்கு தேர்வு செய்யும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
சீன மக்கள் தொகை தொடர்ந்து சரிவை சந்தித்து கொண்டுதான் இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு 90 லட்சம் குழந்தைகள்தான் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தேவரை போற்றக்கூடிய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவோம்: ஸ்டாலின் பேட்டி!