சீனாவில் கொரோனா பரவல் புதிய உச்சம் தொட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய சீனா முடிவு செய்துள்ளது.
சீனாவில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோவேக் தடுப்பூசியின் செயல் திறன் குறைவாகவே இருந்தது. ஆனாலும் பிற தடுப்பூசிகளை சீனா செலுத்தவில்லை.
ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால், அந்த நாடு அமெரிக்க வேக்சின்கள் பக்கம் திரும்பியுள்ளது.
குறிப்பாகத் தலைநகர் பெய்ஜிங்கில் நிலைமை ரொம்பவே மோசமாக உள்ளது. இதனால் பெய்ஜிங் விரைவில் சுகாதார மையங்களுக்கு பைசரின் கொரோனா மருந்தை விநியோகம் செய்ய முடிவு செய்துள்ளது.
மேலும் கொரோனாவுடன் வாழ பழக்கிக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்ட சீனா கட்டுப்பாடுகளை தளர்த்த தொடங்கியிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் இனி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 8ஆம் தேதி முதல் புதிய விதி அமலுக்கு வர உள்ளது. தற்போது வெளிநாடுகளில் இருந்து சீனா வருபவர்கள் ஐந்து நாட்கள் ஹோட்டலிலும் மூன்று நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-ராஜ்
தத்துவத்தில் இறங்கிய தனுஷ் சகோதரர்!
திருவையாறில் புறவழிச்சாலை தேவையில்லை: சீமான்