சபரிமலையில் குழந்தைகள், முதியோர், உடல் ஊனமுற்றோருக்கு தனி வரிசை ஏற்படுத்தியது நல்ல பலன் கொடுத்திருப்பதாக தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் மண்டல கால பூஜை துவங்கியது முதல் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுடைய எண்ணிக்கை சராசரியாக 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை உள்ளது.
முன்பதிவு செய்து வரக்கூடிய பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த காரணத்தினால் குழந்தைகள் முதியவர்கள் உடல் ஊனமுற்றோர் ஆகியோர் சிரமப்படுவதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து சபரிமலை நடைப்பந்தல் முதல் சன்னிதானம் வரை இருக்கக்கூடிய வரிசையில், குழந்தைகள், முதியவர்கள், உடல் ஊனமுற்றோரை நேற்று முதல் ஒன்பதாவது வரிசையில் அனுப்பி வருகிறார்கள்.

18 படி ஏறும் முன் அவர்கள் ஓய்வெடுக்க நாற்காலிகள் மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தரிசனம் முடிந்து கீழே இறங்கும் போதும் ஓய்வெடுக்க தனி வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
இது நல்ல பலனை தந்துள்ளதாக தேவசம்போர்டு தலைவர் பேட்டி அளித்துள்ளார். அவர், சபரிமலை வரக்கூடிய பக்தர்களுக்கு எது பலன் அளிக்குமோ அதை செய்ய தேவசம்போர்டு தயாராக உள்ளது. நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தண்ணீர் மற்றும் பிஸ்கட் வழங்கப்படுகிறது
தற்போது நடைப்பந்தல் முதல் தனி வரிசை உள்ளதை தொடர முடியுமா என்பது குறித்து ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என்று கூறினார். ஒரு குழந்தைக்கு ஒரு பெற்றோர் வீதம் அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கலை.ரா
’போர்கண்ட சிங்கம்’ யார் இந்த கிலியன் எம்பாப்பே
பாஜக எம்பிக்கள் கபடியை ஊக்குவிக்க வேண்டும்: மோடி