உஸ்பெகிஸ்தான்: குழந்தைகளின் உயிரை பறித்த இந்திய மருந்து!

இந்தியா

உஸ்பெகிஸ்தான் நாட்டில் இந்திய நிறுவனமான மரியான் பயோடெக் தயாரித்த டாக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்தை அதிக அளவு உட்கொண்ட 18 குழந்தைகள் இறந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹரியானாவைச் சேர்ந்த மெய்டன் பார்மா தயாரித்த இருமல் சிரப்களில் டீ எத்திலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் அதிகளவு இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று (டிசம்பர் 26) வரை கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளில் 18 பேர் டாக் 1 மேக்ஸ் சிரப்பை எடுத்துக்கொண்டதால் உயிரிழந்துள்ளனர்.

இறந்த குழந்தைகள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை 7 நாட்களுக்கு 2.5 – 5 மில்லி மருந்தை எடுத்துக்கொண்டுள்ளனர். இது குழந்தைகளுக்கான நிலையான மருந்தின் அளவை மீறுவதாக உள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்து வழங்கப்பட்டுள்ளது.

சளி எதிர்ப்பு மருந்தான பாரசிட்டமாலுக்கு பதிலாக மருந்தக விற்பனையாளர்களின் தவறான பரிந்துரையால் டாக் 1- சிரப் வழங்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளின் உடல்நிலை மோசமடைய காரணமாக உள்ளது.

குழந்தைகள் அதிகளவு உட்கொண்ட இருமல் சிரப்பில் எத்திலீன் கிளைகோல் அதிகளவு இருந்துள்ளது. இது நச்சுத்தன்மை வாய்ந்தது. குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கடுமையான மாற்றங்களை ஏற்படுத்தி வாந்தி, மயக்கம், வலிப்பு, இருதய பிரச்சனை, கடுமையான சீறுநீரக செயலிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக் 1 மேக்ஸ் என்ற மருந்தின் மாத்திரைகள் மற்றும் சிரப்கள் நாட்டின் அனைத்து மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் விற்பனையிலிருந்து திரும்ப பெறப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஸ்பெகிஸ்தானில் இருந்து வந்த அறிக்கை குறித்து தங்களுக்கு தெரியும் என்று இந்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் இந்திய மருந்தை உட்கொண்டதால் 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு காம்பியாவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் 66 குழந்தைகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

முடங்கிய ட்விட்டர்: பயனர்கள் அவதி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *