உக்ரைன் மீது கெமிக்கல் ஆயுதங்களை உபேயோகித்ததாக வெளி வந்த தகவலுக்கிடையே, ரஷ்யாவின் அணு ஆயுத பிரிவு தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் இகர் கிரிலோவ் குண்டு வைத்து கொல்லப்பட்டுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது. இரு ஆண்டுகளாக இந்த போர் நடந்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா கெமிக்கல் ஆயுதங்களை வீசியதாக தகவல் வெளியானது. ரஷ்யாவின் அணு ஆயுத பிரிவு தலைவரான இகர் கிரிலோவ் உத்தரவின் பேரிலேயே உக்ரைன் மீது கெமிக்கல் ஆயுதங்கள் வீசப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகை அருகேயுள்ள அவரின் குடியிருப்பருகே டிசம்பர் 17 ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் அவர் கொல்லப்பட்டுள்ளார். வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரில் இருந்த குண்டு வெடித்து இகர் கிரிலாவ் மற்றும் அவருடன் இருந்த மற்றொருவரும் இறந்து போனதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
RKhBZ எனப்படும் ரஷ்யாவின் கதிரியக்க, ரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்பு படையினர் சிறப்பு பிரிவாக இயங்கி வருகின்றனர். இந்த பிரிவினர்தான் உக்ரைனில் கெமிக்கல் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்பட்டது. இந்த பிரிவுக்குதான் இகர் கிரிலாவ் தலைவராக இருந்தார். உக்ரைன் மீது கெமிக்கல் ஆயுதங்கள் வீசப்பட்டதாக சொல்லப்பட்ட அடுத்த நாளே அவர் கொல்லப்பட்டதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இதற்கிடையே, ரஷ்யா உக்ரைன் மீது கெமிக்கல் ஆயுதங்களை வீசவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் செக்யூரிட்டி சர்வீசஸ் அமைப்பு வெடிகுண்டு வைத்து இகர் கிரிலாவை கொன்றுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளதாக ஏ.எப்.பி தெரிவித்துள்ளது. இவர் ஒரு போர்க்குற்றவாளி . உக்ரைன் மீது கெமிக்கல் ஆயுதங்களை வீச உத்தரவிட்டவர். 2022 ஆம் ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து 4,800 முறை கெமிக்கல் ஆயுதங்கள் உக்ரைன் மீது வீசப்பட்டுள்ளது. குறிப்பாக கே-1 ரக வெடிகுண்டுகளை வீசியுள்ளனர். இதனால், எங்கள் சிறப்பு படையினர் அவரை குறி வைத்து அழித்துள்ளனர் என்று உக்ரைன் தரப்பில் சொல்லப்படுகிறதாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்