பிலிப்பைன்ஸ் நாட்டில் செக்ரஸ் ஓக்சிடென்டல் மாகாணத்தில் கேம்ப்யூஸ்தான் ஹைலேண்ட் என்ற ரிசார்ட் அமைந்துள்ளது. இந்த ரிசர்ட்டின் இயக்குநர் ரிச்சார்டோ கானோ என்பவருக்கு சேவல் வடிவத்தில் பிரமாண்ட கட்டடம் கட்ட ஆசை.
இதன் தொடர்ச்சியாக 114 அடி உயரத்தில் 40 அடி அகலத்தில் 90 அடி நீளத்துக்கு இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த சேவல் வடிவ கட்டடத்தை சுற்றிலும் சிறிய கட்டடங்கள் இருப்பதால், இந்த சேவல் கட்டடம் மிக பிரமாண்டமாக தெரிகிறது.
பிரமாண்ட கட்டத்துக்குள் 15 நவீன வசதிகள் கொண்ட அறைகள் உள்ளன. ரிசார்ட்ஸ் என்பதால் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் சேவல் வடிவ கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கட்டத்தின் பணிகள் செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்தது. உலகின் மிக பிரமாண்டமான சேவல் வடிவ கட்டடம் என்று கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
கிட்டத்தட்ட 14 மாதங்களில் இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி அடிக்கடி புயல் தாக்கும் இடமாகும். இதனல் மிகுந்த கவனத்துடன் சேவல் வடிவ கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சேவல் போலவே சிறிய கால்கள் கொண்ட தூணின் மேல்தான் கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும் சோசியல் மீடியாக்களில் புகைப்படங்கள் பரவின. இதை பார்த்து மக்கள் வியந்து போனார்கள். தற்போது, இந்த ரிசார்ட்டில் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வந்து தங்குவார்கள் என்பதால் கட்டட உரிமையாளர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை… இன்று சவரன் எவ்ளோ?
ஜார்க்கண்ட் – வயநாடு : காலை 9 மணி தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்!