சத்தீஸ்கர் மாநிலத்தில் மினி சரக்கு வாகனம் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் மாவட்டத்தில் உள்ள பஹ்பானி கிராமத்திற்கு அருகில் டெண்ட் இலைகளை ஏற்றிக்கொண்டு சென்ற மினி சரக்கு வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த பைகா பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த 14 பெண்கள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8 பேர் காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுத் தொடர்பான தகவல் தெரிந்ததும், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பஹ்பானி கிராமத்திற்கு பொருட்களை ஏற்றி செல்வதற்காக காட்டில் இருந்து டெண்டு இலைகளைப் பறித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து நடந்துள்ளது என முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அடை மழை வெளுக்கப் போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
IPL 2024: கிறிஸ் கெய்லிடம் கோலி வைத்த டிமாண்ட்!